கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் உட்கட்சி தேர்தல் குறித்து வழக்கு தொடர முடியாது என்ற இபிஎஸ் வாதத்தை ஏற்று கே.சி. பழனிசாமியின் மனு தள்ளுபடி

0 2441
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் உட்கட்சி தேர்தல் குறித்து வழக்கு தொடர முடியாது என்ற இபிஎஸ் வாதத்தை ஏற்று கே.சி. பழனிசாமியின் மனு தள்ளுபடி

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என இபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்று, கே.சி. பழனிசாமியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தொடர்ந்துள்ள வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் கிடைக்கவில்லை என்பதால் தமது நீக்கம் செல்லாது என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து மனுதாக்கல் செய்ய கே.சி.பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்களே விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments