நின்றிருந்த மாருதி வேன் மீது சரக்கு வாகனம் மோதி இரண்டு பெண்கள் உயிரிழப்பு.. திருமணத்துக்கு பெண் பார்த்து திரும்பிய போது விபரீதம்..!
நின்றிருந்த மாருதி வேன் மீது சரக்கு வாகனம் மோதி இரண்டு பெண்கள் உயிரிழப்பு.. திருமணத்துக்கு பெண் பார்த்து திரும்பிய போது விபரீதம்..!
கோவை அருகே மகனின் திருமணத்திற்கு பெண் பார்த்து விட்டு வந்த பெண்மணி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
கோவையை சேர்ந்த செல்வராஜ், ராஜம்மாள் தம்பதியினர் தங்களது மகன் ஞானதுரையின் திருமணத்திற்கு பெண்பார்ப்பதற்காக உறவினர்களுடன் மாருதி வேனில் வடுகம்பாளையம் சென்றுவிட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே வண்டியை நிறுத்தியபோது, சரக்கு வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியது.
இதில் ராஜம்மாள், செல்வி ஆகிய இருவர் பலியான நிலையில் மற்றவர்கள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments