அம்மானில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பலி.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 மாத பெண் குழந்தை..!

0 3203
அம்மானில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 14 பேர் பலி.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 4 மாத பெண் குழந்தை..!

ஜோர்டனில் நான்கு அடுக்கு கட்டிடம் இடிந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கிய 4 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை தலைநகர் அம்மானில் உள்ள கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. அக்கட்டிடத்தில் வசித்து வந்த பெண்ணின் 4 மாத பெண் குழந்தை 24 மணி நேரத்திற்கு மேலாக இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தையை மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர்.

இதனிடையே, அங்கு கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த மீட்பு பணி நிறைவடைந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

'Miracle' in Jordan as baby pulled alive from collapsed building pic.twitter.com/esPHPTAUua

— AFP News Agency (@AFP) September 16, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments