பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வேயர் கைது.!

0 7620

சென்னையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்ட சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

புரசைவாக்கத்தில், 3 கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கிய ரங்கநாதன் என்பவரது பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய , சர்வேயராகப் பணியாற்றும் சையது சவுகத்துல்லா என்பவர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் சையது சவுகத்துல்லாவை கையும்களவுமாக பிடித்த போலீசார் அவரிடமிருந்த மேலும் 38,000 ரூபாயையும், திருவல்லிகேணியில் உள்ள அவரது வீட்டிலிருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments