பிரேக் அறுந்ததால் முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்து.. படுகாயமடைந்த தந்தை, மகள் மருத்துவமனையில் அனுமதி..!

0 3390
பிரேக் அறுந்ததால் முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதிய தனியார் பேருந்து.. படுகாயமடைந்த தந்தை, மகள் மருத்துவமனையில் அனுமதி..!

கேரள மாநிலம் திருச்சூரில் பிரேக் அறுந்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சூர் நோக்கிச் சென்ற அந்த தனியார் பேருந்து இருஞாலிகுடா பகுதியில் குறுகலான சாலையில் சென்ற போது, பிரேக் அறுந்ததால் முன்னே சென்ற 3 பைக்குகளின் மீது மோதி, ஒரு டெம்போ டிராவலர் மீது இடித்து நின்றது.

இதில் மகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 இருசக்கர வாகன ஓட்டிகள் லேசான காயமடைந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments