சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை..!
சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூப் சேனல் ஒன்றில் பேசியது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, " நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ தமது நோக்கமல்ல என்றும், நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு, பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது என்றும் தெரிவித்த நிலையில் அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Comments