தெலங்கானாவில் 3 பேரின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து.. அதிவேகத்தால் சோகம்..!
தெலங்கானா மாநிலம் மேட்சலில் சாலையை கடக்க முயன்றவர் மீது அதிவேகமாக மோதி கீழே விழுந்தபைக்கில் சென்ற ஆணும், பெண்ணும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிகாலை வேளையில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடந்து செல்பவர் மீது மோதி கீழே விழுந்தது. அதில் பயணித்த ஆணும் பெண்ணும் சாலையில் விழுந்த மறுகனமே, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது ஏறி இறங்கியது.
இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களது இருசக்கர வாகனம் முதலில் மோதிய நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Comments