சரிவர பணியாற்றாத காரணத்தால் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீசாரை லாக் அப்பில் அடைத்த எஸ்பி.!

0 5959

பீகார் மாநிலத்தில் 2 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களை சரிவர பணியாற்றவில்லை என கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லாக் அப்பில் அடைத்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

நவடா நகர் காவல்நிலையத்தில் கடந்த 8ம் தேதி இரவு 9 மணிக்கு ஆய்வு நடத்த எஸ்பி கவுரவ் மங்க்லா வந்துள்ளார். அப்போது கோப்புகளை பார்வையிட்டபோது, சரிவர பணியாற்றாததை கண்டுபிடித்து லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இரவில் சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது பொய்யென எஸ்பி மங்க்லா மறுத்துள்ள நிலையில், அவருக்கு எதிராக விசாரணை நடத்த பீகார் மாநில காவல்துறை சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments