சூனியம், திருஷ்டி எடுப்பதாக கூறி, 6 சவரன் நகையை வாங்கி மோசடி.. 2 போலி ஜோதிடர்கள் கைது!

0 1572

திருத்தணி அருகே சூனியம் எடுப்பதாக கூறி 2 பேரிடம் 6 சவரன் நகையை மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்த 2 போலி ஜோதிடர்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவிகிரிபாபு, ஏமந்த்குமார், ராமு ஆகியோரின் ஜோதிட மையத்துக்கு சென்றுள்ளார்.

சூனியம், திருஸ்டி இருப்பதாகவும், அவரிடமுள்ள நகையை கொடுத்தால் விளக்கு முன்பு வைத்து பூஜை செய்து தருகிறோம், அதை அணிந்து கொண்டால் சரியாகி விடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பி 3 சவரன் நகையை கொடுத்த அவர், பின்னர் நகையை வாங்க சென்றபோது 2 பேரையும் காணாததால் அதிர்ச்சியடைந்தார். இதேபோல் பெண் ஒருவரிடமும் 3 சவரன் நகையை மோசடி செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments