அரசியலில் 70 ஆண்டுகளாக சக்திவாய்ந்த தலைவராக விளங்கியவர் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்.!

0 2280

இங்கிலாந்து அரசியலில் 70 ஆண்டுகளாக சக்திவாய்ந்த தலைவராக விளங்கியவர் ராணி இரண்டாம் எலிசபெத். உலக நாடுகள் மற்றும் அவற்றின் தலைவர்களுடன் ராணி தொடர்புடைய நிகழ்ச்சிகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

பிரிட்டிஷ் செல்வாக்கு சரியும் நிலையில் இருந்த காலத்தில், ஜனநாயக நாடுகள் பல உருவாகி முடியாட்சியின் தேவை கேள்விக்குரியான நேரத்தில் பதவிக்கு வந்தவர் ராணி எலிசபெத். ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ல் காலமானதையடுத்து அரசு வாரிசு முறையில் ராணியாக தமது 25-வது வயதில் முடிசூடினார்.

பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்த எலிசபெத், உலக அரசியலில் பெரும் பங்கு வகித்தார். வடஅயர்லாந்து, இங்கிலாந்தில் அதிகாரப் பகிர்வு, ஆப்பிரிக்காவில் காலனி ஆதிக்கம் மாற்றம், ஐரோப்பிய நாடுகளுடன் இணைப்பு , ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகல் என பல்வேறு அரசியல் மற்றும் அரசுரீதியான மாற்றங்கள் இவரது காலத்தில் நிகழ்ந்தன.

இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளின் ராணியாகவும் 54 நாடுகளின் கூட்மைப்பான காமன்வெல்த்துக்கு அரசியாகவும் அவர் திகழ்ந்து வந்தார். இங்கிலாந்து பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் பிரிட்டன் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்ததிலும் அவர் முக்கியப் பங்கு வகித்து வந்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 15 பிரதமர்களை தேர்வு செய்த எலிசபெத், மூன்று நாட்களுக்கு முன்பு நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் 15 வது புதிய பிரதமராக லிஸ் டிரஸ்க்கு பதவிப் பிரமாணம் செய்து தமது அரசு கடமையை நிறைவேற்றி வைத்தார்.

சுமார் 76 ஆண்டுகள் மன்னர் பிலிப்புடன் குடும்பம் நடத்தி வந்த ராணி எலிசபெத், கோவிட் ஊரடங்கு காலத்தில் தமது கணவருடன் வசித்து வந்தார்.கடந்த ஆண்டு மன்னர் பிலிப் தமது 99 வது வயதில் மறைந்த நிலையில், ராணி எலிசபெத்தும் தற்போது உயிரிழந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments