குட்டையில் தவறி விழுந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு.. கோவில் கும்பாபிஷேகத்தை காண வந்த இடத்தில் சோகம்..!

0 2193

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி அருகே கோவில் கும்பாபிஷேகத்தை காண வந்த சிறுவர்கள் 2 பேர் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்மாளபட்டி காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை காண பக்கத்து ஊரிலிருந்து பெற்றோருடன் வந்திருந்த இரு சிறுவர்கள், தற்போது பெய்து வரும் கன மழையால் நிரம்பியிருந்த குட்டை அருகே விளையாடி கொண்டிருந்தனர்.

எதிர்பாராவிதமாக இருவரும் தவறி குட்டைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை தொலைவிலிருந்து கவனித்த சிறுமி அளித்த தகவலின் பேரில் உறவினர்கள் குட்டையில் குதித்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments