ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்தை இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட கட்டுமான பொறியாளர்..

ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த 7 லட்சம் ரூபாய் கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட கட்டுமான பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை அஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் வசிக்கும் மகள் வீட்டில் தங்கியிருந்த கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவர், மேற்கு மாம்பலம் கிரி தெருவில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், தமிழ்ச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறித்து தப்பியோட முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த நபர், நுங்கம்பாக்கத்தில் தங்கி தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சரவணன் என்பது தெரியவந்தது.
தனது நண்பர்களிடம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததாகவும், அதில், 3 லட்சம் ரூபாய் கடனை திருப்பி கொடுத்த நிலையில், எஞ்சிய பணத்தை கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments