பள்ளிகாலம் முதல் கல்லூரி வரை தொடர்ந்த தொல்லையால்... போக்சோவில் கைதான போலீஸ்
சென்னையில் கல்லூரி மாணவியை அவரது 13 வயது முதல் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்து முன்னாள் ராணுவ வீரரும், தற்போது காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் 50 வயது நபரை மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 19 இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். மாணவியின் தந்தையை பிரிந்து அவரது தாய் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு, காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பாண்டியராஜன் என்பவருடன் மாணவியின் தாயாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மாணவியின் தாய் வீட்டில் இல்லாத சந்தர்பங்களில், அப்போது 13 வயது சிறுமியாக இருந்த மாணவியை உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மிரட்டி 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
தற்போது மாணவியின் தாயார் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை விட்டு தனியாக வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவியை சமீபத்தில் கல்லூரியின் நுழைவு வாயிலில் வந்து சந்தித்த உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், சிறுமியாக இருந்தததை விட தற்போது அழகாக இருப்பதாக மாணவியிடம் பேசியதாக சொல்லப்படுகிறது.
தன்னிடம் ஏற்கனவே பதிவு செய்து வைத்த அந்தரங்க புகைப்படம், வீடியோக்கள் இருப்பதாகவும், தன்னுடன் மீண்டும் வரவில்லை என்றால் அவற்றை வெளியிடுவதாக மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்படி புகாரை விசாரித்த வில்லிவாக்கம் மகளிர் போலீசார், உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில் உதவி ஆய்வாளர் மாணவி சிறுமியாக இருக்கும் போது பலைமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமியில் ஈடுபட்டத்தை ஒப்புகொண்டார்.
பின்னர் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை கைது செய்னர்.
Comments