தனியார் நிதி நிறுவன ஊழியர் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

0 3515
தனியார் நிதி நிறுவன ஊழியர் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

சென்னை பாண்டிபஜாரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

தேனி கம்பத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மனைவி, குடும்பத்தினர் கோவையில் வசித்து வரும் நிலையில், இவர் பாண்டி பஜாரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு தனியார் நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த முத்துராஜ், இன்று காலை 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது கைகளில் பிளேடால் கிழித்துக் கொண்ட தடயங்கள் உள்ள நிலையில், அதிகாலை 4 மணியளவில் அவர் பதற்றத்தோடு மாடிக்கு சென்ற காட்சிளும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனையால் முத்துராஜ் தற்கொலை செய்து கொண்டா? அல்லது குடும்ப பிரச்சனையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments