ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பறிமுதல்.!
சேலத்தில் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட ஐந்து லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், நெய்க்காரப்பட்டி பகுதியில் சிலை தயாரிப்பு பணியை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, நீரில் கரையும் தன்மை இல்லாத ஜிப்சம் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாகனங்களில் வைத்து எடுத்துச் சென்றனர்
Comments