அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

0 2736

அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்புக்கு சர்வதேச கால் பந்தாட்ட அமைப்பான FIFA விதித்த இடைக்காலத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்தாட்டப் போட்டிகள் திட்டமிட்டபடி அக்டோபர் 11 முதல் 30 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் நிர்வாகிகள் மீது புகார் எழுந்த நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக் குழுவை மாற்றியமைப்பதாக இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பு உறுதியளித்ததையடுத்து தடையை விலக்கிக் கொள்ள FIFA முன்வந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments