கேரளாவை போன்று தமிழகத்திலும் ஆட்டோ முன்பதிவுக்கு செயலி

கேரளாவைப் போன்று, தமிழகத்தில் ஆட்டோ முன்பதிவுக்கு செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவைப் போன்று, தமிழகத்தில் ஆட்டோ முன்பதிவுக்கு செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் டாக்சி, ஆட்டோவுக்கான முன்பதிவு செயலியை அரசே தொடக்கி செயல்படுத்தி வருகிறது. அதில், பேனிக் பட்டன் உட்பட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
இதே போன்று, தமிழக அரசும் செயலி உருவாக்குவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments