ஹைதராபாத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்த ஒத்துழையுங்கள் - ஓவைசி எம்.பி. வேண்டுகோள்!

0 2894

ஹைதராபாத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்திட அனைத்துத் தரப்பும் அமைதி காத்து ஒத்துழைக்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பியான இஸ்லாமியத் தலைவர் அசாதுதீன் ஓவைசி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத் எப்போதும் அமைதியை விரும்பும் நகரமாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சிறப்புத் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பகையுணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் ராஜாசிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

எதிர்த்தரப்பினரைத் தூண்டும் வகையில் எந்தவித முழக்கமும் எழுப்ப வேண்டாம் என்று இஸ்லாமிய மக்களை ஓவைசி கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments