ஸ்ரீமதியின் உடலில் எங்கெங்கு காயங்கள்.. வெளியானது அதிர்ச்சி தகவல்..!
மாணவி ஸ்ரீமதியின் முதலாவது பிணகூறாய்வை விட 2 வது பிணகூறாய்வு அறிக்கையில் கூடுதலாக இரு காயங்கள் இருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் காசி விஸ்வ நாதன். பிணகூறாய்வு வீடியோவை பார்க்கவிரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் பலியான மாணவி ஸ்ரீமதியின் உடலில் கூடுதலாக இரு காயங்கள் இருப்பது 2 வது பிணகூறாய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறிய வழக்கறிஞர் காசி விஸ்வ நாதன், மாணவியின் உடலில் எங்கெங்கு காயங்கள் உள்ளது என்ன மாதிரியான சோதனைகள் செய்யப்பட்டது என்பது குறித்து விவரித்துள்ளார்.
அவரது இடுப்பு எலும்பு முறிந்துள்ளதாகவும், தாங்கள் பலாத்காரம் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியதால் அது தொடர்பான ஸ்வாப் சோதனைகளையும் முழுமையாக செய்துள்ளனர் என்று தெரிவித்த வழக்கறிஞர் காசி விஸ்வ நாதன், மாணவியின் பிணகூறாய்வு வீடியோவை பார்க்கவிரும்பாததால் அதனை ஒப்படைக்க கோரவில்லை என்று தெரிவித்துள்ளார்
Comments