தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

0 4291
தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வரும் 27ம் தேதி டெல்டா மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், 28ம் தேதி 17 மாவட்டங்களிலும் 29ம் தேதி 18 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments