பால் விற்பனை நிலையத்தில் 2.43 லட்சத்தை கொள்ளையடித்த கும்பல்... 15 வயது சிறுவன் அளித்த தகவலால் சிக்கிய கும்பல்

0 5836

தனது கண்முன்னே நடந்த கொள்ளை குறித்து,15 வயது சிறுவன் ஒருவன் சமயோஜிதமாக 100 எண்ணுக்கு போன் செய்தததோடு செல்போனில் படம் பிடித்தும் 2 கொள்ளையர்களை சிக்க வைத்துள்ளான்.

காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் அருகே நள்ளிரவில் பால் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து ஒரு கும்பல் 2 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தது. இதனை கண்ட 15 வயது சிறுவன் ஒருவன் உடனே 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், அந்த கொள்ளை கும்பலை தனது செல்போனில் படம் பிடித்தும் போலீசாரிடம் அளித்தான்.

சிறுவன் அளித்த தகவல்களை வைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அச்சமின்றி உரிய நேரத்தில் தகவல் அளித்த அந்த சிறுவனுக்கு போலீசாரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments