அரசியல் பிரமுகரிடம் பணம் பறிப்பதற்காக 3 வயது பெண் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள்.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசியல் பிரமுகரிடம் பணம் பறிப்பதற்காக 3 வயது பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கல்கேரி கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் ரெட்டி என்பவரின் 3வயது பெண் குழந்தையை நேற்றிரவு வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.இக்காட்சிகள் அனைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனைக் கண்ட பொதுமக்கள் துரத்தி சென்ற போது மர்ம நபர்கள் வழியில் உள்ள ஏரியில் குழந்தையை இறக்கி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கர்நாடக மாநில போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மஞ்சுநாத் ரெட்டியிடருந்து பணம் பறிப்பதற்காக அவரது குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
Comments