ஆரோக்கியமாக பிரசவித்த 5 பச்சிளம் சிசுக்களை விஷ மருந்து செலுத்திக் கொன்ற சைக்கோ நர்ஸ்..!

0 4792
ஆரோக்கியமாக பிரசவித்த 5 பச்சிளம் சிசுக்களை விஷ மருந்து செலுத்திக் கொன்ற சைக்கோ நர்ஸ்..!

அர்ஜெண்டினாவில் ஆரோக்கியமாக பிறந்த பச்சிளம் குழந்தைகளைக் விஷ மருந்து செலுத்திக் கொன்ற விபரீத சைக்கோ நர்ஸை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோர்டோபாவின் நியோனாடல் மகப்பேறு மருத்துவமனையில் பிரசவித்த 5 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

இதுகுறித்த புகாரின்பேரில் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் பிரெண்டா அகுரோ உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே பிரெண்டா மீது 2 குழந்தைகளை கொன்றதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், மேலும் 3 குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் நிலுவையில் உள்ளன.

இறந்த குழந்தைகளின் உடலில் அதிகப்படியான பொட்டாசியம் காணப்பட்டதால் அதுவே இறப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று இந்த வழக்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments