படகில் அகற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஆயுதங்கள்.. விசாரணை நடத்தி வரும் போலீசார்..!

படகில் அகற்றப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஏ.கே.47 ரக துப்பாக்கி, ஆயுதங்கள்.. விசாரணை நடத்தி வரும் போலீசார்..!
மகாராஷ்டிரா கடற்பகுதியில், ஏகே 47 ரக துப்பாக்கி உள்பட பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ராய்கட்டின் ஹரிஹரேஸ்வர் கடற்கரை பகுதியில், ஆயுதங்கள் அகற்றப்பட்ட நிலையில் படகில் இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்க ராய்கட்டின் எம்.எல்.ஏ முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments