அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக மேலும் 3 பெண்களை கைது செய்துள்ள போலீசார்.!

0 2884

மதுரையில் அமைச்சர் கார் மீது காலணி வீசியது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, 6 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக மகளிர் அணியை சேர்ந்த சரண்யா, தனலெட்சுமி மற்றும் தெய்வானை ஆகிய 3 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments