சுமார் 1000 ஆண்டுகள் பழமையான 8 உலோக சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்!

0 1843

கும்பகோணம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான 6 உலோக சிலைகள் உட்பட 8 சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சுவாமி மலையை சேர்ந்த ஸ்தபதி மாசிலாமணியின் சிற்பக்கலை கூடத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிலைகளை மறைத்து வைத்து வெளிநாட்டிற்கு கடத்த இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் 8 உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் 1000 ஆண்டு பழமையான சிலைகள் உட்பட  அனைத்தையும் தான் செய்ததாக கூறி ஸ்தபதி மாசிலாமணி முன்னுக்கு பின் முரணான தகவலை கூறி வருவதால் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments