ராணுவ வீரரின் மனைவியின் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது

0 2138
ராணுவ வீரரின் மனைவியின் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது

திருச்சி மாவட்டம் முசிறியில் ராணுவ வீரரின் மனைவியின் தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் கைது செய்தனர்.

பேரூர் குடித்துறை கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் நீலமேகம், காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில் இவரது மனைவியின் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றுவிட்டதாக கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ மூலம் முதலமைச்சர் மற்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தாலி பறிப்பில் ஈடுபட்ட நபர் வேறொரு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது.

அந்த நபரை காவலில் எடுத்து விசாரித்ததில், திருடப்பட்ட தாலி செயினை உருக்கி கட்டியாக மாற்றி தனது வீட்டின் பின்புறம் புதைத்து வைத்ததும் தெரியவந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments