போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து தங்களுக்கு தாங்களே போதை ஊசி செலுத்திக்கொண்ட 7 பேர் கைது

0 2960

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்தி கொண்ட 7 பேரை போலீசார்  கைது செய்தனர்.

மலை கருப்புசாமி கோவில் பகுதியில் 5 பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கொரியர் மூலம் 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரையை 14 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது தெரியவந்தது.

இதேபோல், சித்தோட்டில் வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இருவேறு சம்பவத்தில் போதை மாத்திரைகளை வாங்கித் தந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments