சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே சாலை வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவர் படுகாயம்
சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே வேகமாக சென்ற மாநகரப் பேருந்து மோதியதில் பெயர் பலகை சாய்ந்து விழுந்து 2 பேர் படுகாயமடைந்தனர்.
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், ராட்சத இரும்பு கம்பம் ஒன்றில் பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது. இன்று பிற்பகலில், கோயம்பேடு நோக்கி சென்ற மாநகரப் பேருந்து ஒன்று, சாலையோரம் இருந்த அந்த இரும்பு கம்பத்தின் மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.
பேருந்து மோதிய வேகத்தில் இரும்பு கம்பத்துடன் பெயர் பலகை சரிந்து, சாலையின் இரு வழிகளிலும் சென்ற இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனம் மீது விழுந்துள்ளது. இதில், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும், சரக்கு வாகன ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.
Comments