இந்த ரணகளத்திலும் கிளு கிளுப்பு கேட்குதோ ..? வெள்ளத்தில் சிக்கிய காதலர்கள்..! மீட்கப்பட்டநேரடி காட்சிகள்

0 3228
காதல் ஜோடியை சுத்துப் போட்ட வெள்ளம்..! மரத்தில் ஏறி தப்பித்த காட்சிகள்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரைக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடி திடீர் வெள்ளத்தில் சிக்கியதால், மரத்தில் ஏறி உயிர்தப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை தென்மேற்கு பருவமழையால் நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து நான்கு மதகுகள் திறக்கப்பட்டு உபரியாக 14,000வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் காரமடை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த காதல் ஜோடி வெள்ளிக்கிழமை மாலை மேட்டுப்பாளையம் அருகே உள்ள விளாமரத்தூர் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து மனம் விட்டு பேசுவதற்காக பவானி ஆற்றுப்பகுதியில் ஒதுங்கியுள்ளனர்.

அங்கு ஆற்று படுகையில் அமர்ந்து மெய்மறந்து பேசி கொண்டிருந்த நிலையில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளம் ஏற்பட்டு அவர்களை சுற்றியதால், ஆற்றின் கரை ஓரத்தில் இருந்த இருவரும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர் இதனால் செய்வதறியாது கத்தி கூச்சலிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த சிலர் இது குறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வந்ததால் என்ன செய்வது என தெரியாமல் ஆற்றின் நடுவே இருந்த ஒரு மரத்தில் ஏறி காதல் ஜோடி தவித்துக் கொண்டிருந்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் தீயணைப்பு நிலை அதிகாரி பாலசுந்தரம் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட காதல் ஜோடியை கயிறு கட்டி பரிசலில் இறக்கி நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்.

காதல் ஜோடி வெள்ளத்தின் பிடியில் சிக்கியதால் சங்கடத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இந்த இளஞ்சோடிகளின் 4 வருட காதல் ஊருக்கே அம்பலமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments