காமன்வெல்த் 8-வது நாள் போட்டி: 3 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் வென்றது இந்தியா..!

காமன்வெல்த் 8-வது நாள் ஆட்டத்தில், மல்யுத்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் 3 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப்பதக்கங்களைத் தட்டிச்சென்றனர்.
65 கிலோ எடை பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் பஜ்ரங் புனியா, கனடா வீரர் லாச்லன் மெக்னீஸை 9 க்கு 2 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
86 கிலோ எடை பிரிவில், தீபக் புனியா, பாகிஸ்தான் வீரர் இனாமை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக், கனடா வீராங்கனை அனா கோடினெஸ் கோன்சாலஸை வீழ்த்தி தங்கம் வென்றார்.
57 கிலோ எடை பிரிவில் அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்கள் 4 பேரும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர இந்திய வீரர்கள் மோகித் கிரேவால் மற்றும் திவ்யா கக்ரன் வெண்கலப்பதக்கங்களை வென்றனர். 9 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களுடன் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Comments