முதலில் வருவோருக்கே முன்னுரிமை எனக்கூறி ஆ.ராசா 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டார் - அண்ணாமலை குற்றச்சாட்டு
'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' எனக்கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா 2ஜி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பா.ஜ.க. ஆட்சியில் அலைக்கற்றைக்கான ஏலம் வெளிப்படையாக நடப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், 5ஜி ஏலத்தில் அரசு எதிர்பார்த்த தொகை கிடைக்காததால் முறைகேடு நடந்ததாக கூறுவது தவறு என்றும் பாதியளவே ஏலம் விடப்பட்டு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பெற்றதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிப்பதை கேட்காமல் வெளிநடப்பு செய்த எம்.பி.க்கள், தமிழக மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றாமல் மத்திய அரசு மீது பழிபோடுவதை தி.மு.க. நிறுத்த வேண்டும் என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தைரியமிருந்தால் தன் மீது கை வைத்து பார்க்கட்டும் என்றும் மானநஷ்ட வழக்கு பற்றி கவலை இல்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
Comments