பெற்றோர் கண்டித்ததால் எலிமருந்து உண்டு தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0 2090

ஈரோடு அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால், பெற்றோர் கண்டித்த மன வருத்தத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 10ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கண்ணுக்கடை பகுதியைச் சேர்ந்த பசீர் அகமது என்ற கூலித் தொழிலாளியின் மகள் சபீனா, தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த காலாண்டு தேர்வில் மாணவி மதிப்பெண் குறைவாக பெற்றதாகவும் இதனால் அடிக்கடி டி.வி பார்க்காதே எனக்கூறி பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு படிப்பு வராததால் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த ஒன்றாம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் அன்றைய தினமே, பெற்றோர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments