குளிர்ந்த நீரில் கவிழ்ந்த பாய்மரப்படகிற்குள் 16 மணி நேரம் தத்தளித்த 62 வயது நபர் பத்திரமாக மீட்பு

0 2513

ஸ்பெயின் அருகே கடலில் கவிழ்ந்த பாய்மரப்படகிற்குள் 16 மணி நேரமாகத் தத்தளித்த 62 வயது நபரை கடலோரக் காவல்படையினர் போராடி மீட்டனர்.

சிசர்காஸ் தீவுகளில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த பாய்மரப்படகு, மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழ்ந்தது. அதில் பயணித்த நபர் ரேடியோ மூலம் கரைக்கு அபாய சமிக்ஞை அனுப்பியுள்ளார்.

பின், குளிர்ந்த நீரில் உறையாமல் இருக்க அணியக்கூடிய Immersion Suitஐ மாட்டிக்கொண்டு, தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள்ளேயே உடல் முக்கால்வாசி தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்துள்ளார். ஹெலிகாப்டர் மற்றும் படகில் வந்த மீட்பு குழுவினர், கடலில் கவிழ்ந்த நிலையில் இருந்த படகிற்கு அடியில் சென்று அறையின் கதவை திறந்து உள்ளே இருந்த அந்த நபரை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments