கடற்கரையில் நினைவிடங்கள் குறித்த சீமானின் பேச்சுக்கு ஜெயக்குமார் கண்டனம்
ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாகவும், இதன்மூலம் பால்வளத்துறை அமைச்சர் ஒருநாளைக்கு 2 கோடியே 40 இலட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆவின் பால் பாக்கெட்டில் அளவு குறைவாக உள்ளதாகவும், இதன்மூலம் பால்வளத்துறை அமைச்சர் ஒருநாளைக்கு 2 கோடியே 40 இலட்ச ரூபாய் ஊழல் செய்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தியபின் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை மெரினா அருகே கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கூறிய ஜெயக்குமார், கடற்கரையில் உள்ள நினைவிடங்கள் குறித்துச் சீமான் பேசியதற்குக் கண்டனம் தெரிவித்தார்.
Comments