பாரி வேட்டையில் ஈடுபட்ட கிராம மக்கள்.. 50 பேருக்கு தலா ரூ.5,000 ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்..!

பாரி வேட்டையில் ஈடுபட்ட கிராம மக்கள்.. 50 பேருக்கு தலா ரூ.5,000 ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்..!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழனி அருகே பாரி வேட்டை நடத்துவதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வேட்டை நாய்களுடன் வந்திருந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொப்பம்பட்டி பகுதியில் பலர் வேட்டை நாய்களுடன் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது கரூர் மாவட்டம் தோகைமலையை சேர்ந்த அவர்கள் பாரி வேட்டையில் ஈடுபட 26 வேட்டை நாய்களுடன் வந்திருப்பது தெரியவந்தது.
வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என எச்சரித்த வனத்துறையினர் ஆளுக்குத் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
Comments