செஸ் ஒலிம்பியாட் 4ஆவது சுற்று : பெரும்பாலான போட்டிகளை டிரா செய்த இந்திய வீரர்கள்..!

0 849
செஸ் ஒலிம்பியாட் 4ஆவது சுற்று : பெரும்பாலான போட்டிகளை டிரா செய்த இந்திய வீரர்கள்..!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4ஆவது சுற்றில்,  இந்திய வீரர், வீராங்கனைகள் பெரும்பாலான போட்டிகளை டிரா செய்த நிலையில், தமிழக வீரர் குகேஷ், சரின், தன்யா உள்ளிட்ட 5 பேர் வெற்றிப்பெற்றனர். 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 4ஆம் நாளில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஏ, பி, சி என 3 பிரிவுகளில் களம் இறங்கினர்.

ஓபன் 'பி' பிரிவில் தமிழக வீரர் குகேஷ், சரின் நிஹில் ஆகியோர் இத்தாலி வீரர்களை வீழ்த்தினர். அதே பிரிவில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா, சத்வானி ஆகியோர் விளையாடிய போட்டிகள் டிராவில் முடிந்தது.

ஓபன் 'ஏ' பிரிவில் பிரான்ஸ் அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் ஹரிகிருஷ்ண பென்டாலா, விதித் சந்தோஷ், அர்ஜுன், நாராயண் ஆகியோர் விளையாடிய போட்டிகள் அனைத்தும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது.

அதேபோல், 'சி' பிரிவில் ஸ்பெயின் அணிக்கு எதிராக தமிழக வீரர்கள் சேதுராமன், கார்திகேயன் முரளி விளையாடிய போட்டிகளும், சூர்யா சேகர் விளையாடிய போட்டியும் டிராவில் முடிந்தது.

மேலும், மகளிர் 'ஏ' பிரிவில் தான்யா சச்தேவ் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தினார். அதே பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி, கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவள்ளி விளையாடிய போட்டிகள் சமனில் முடிந்தன.

'பி' பிரிவில், விளையாடிய வந்திகா அகர்வால், எஸ்டோனிய வீராங்கனையை தோற்கடித்தார். அதே பிரிவில், பத்மினி, சவுமியா சுவாமிநாதன், திவ்யா ஆகியோர் விளையாடிய போட்டிகள் டிராவானது.

மகளிர் 'சி' பிரிவில், ஜார்ஜியா அணிக்கு எதிரான போட்டியில் நந்திதா மட்டும் வெற்றிப்பெற்ற நிலையில் மற்ற 3 பேர் தோல்வியுற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments