ஊராட்சி தலைவர் மீதான புகார் மீது 2 ஆண்டுகளாக விசாரணையா? - உயர் நீதிமன்றம்

ஊராட்சி தலைவர் மீதான புகாரின் விசாரணை, 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்கொடி ஊராட்சி தலைவர் மணிமொழியன், ஊராட்சி பொது நிதியில் முறைகேடு செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனு அளித்தார்.
நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக நடவடிக்கை தேவை என்றார்.
Comments