கொரோனாவில் இருந்து குணமடைந்தார் அதிபர் பைடன்

0 2126

அமெரிக்க அதிபர் பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் பைடனுக்கு இரு வேளை பரிசோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்ததாகவும், இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பத்து நாட்களுக்கு முக கவசம் அணிய பைடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மற்றபடி பொது வேலைகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments