நெல்லையில் கல்வி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

0 2544

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, முதலாமாண்டு கல்லூரி மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜலிங்கபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற கூலித் தொழிலாளியின் மகள், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பட்டப்படிப்பு சேர்ந்துள்ளார். கல்விக்கட்டணம் 12 ஆயிரம் ரூபாயை சிரமப்பட்டு இரண்டுதவணைகளாக செலுத்தியுள்ளார்.

மேலும் கூலி தொழிலாளி என்பதால் குடும்ப செலவுக்கு போதிய பணம் இன்றி தவித்துள்ளார். இருந்த போதிலும் மகள் படிப்பிற்காக மிகுந்த சிரமப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி மன வேதனையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

மாணவி எழுதியதாக கடிதம் ஒன்றை கைப்பற்றிய போலீசார், அதில் கல்விக் கட்டணம் செலுத்த பெற்றோர் சிரமப்படுவதால் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக மாணவி எழுதி வைத்துள்ளதாக தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments