வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதி விபத்து
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், திடீரென சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பைக் மெக்கானிக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
நத்தம் புறநகர் பகுதியில் டூவீலர் மெக்கானிக் கடை நடத்தி வந்த அழகர்சாமி என்பவர், நேற்று இரவு வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, மூன்றுலாந்தர் பகுதியில் சாலையின் குறுக்கே திடீரென வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
Comments