நேரடியாக பசுவின் மடுவில் பால் குடித்து குதூகலிக்கும் 'கிங்கினி மிங்கினி' சிறுவன்..! தரமான பால் வேணும்னா இதான் ஒரே வழி..!

0 29443
நேரடியாக பசுவின் மடுவில் பால் குடித்து குதூகலிக்கும் 'கிங்கினி மிங்கினி' சிறுவன்..! தரமான பால் வேணும்னா இதான் ஒரே வழி..!

சுட்டிப்பையன் ஒருவன் பயமில்லாமல் பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தாய் பாலுக்கு நிகரானது நாட்டுப்பசு மாட்டுப்பால் என்பார்கள் அந்த பாலின் மகத்துவத்தை உணர்ந்தோர் வேறு பால் வகைகளை தேடிச்செல்வதில்லை. கிராமப்புறங்களில் தங்கள் வீட்டு பால்தேவைக்காக என்றே பிரத்யேகமாக பசுமாடு வளர்ப்போர் இன்றும் உள்ளனர்.

அந்தவகையில் மேல் பனியன் போட்ட சுட்டிப்பையன் ஒருவன் தனது தாத்தாவின் கட்டுப்பாட்டில் நிற்கும் நாட்டு பசுமாடு ஒன்றின் மடுவில் பால்குடிக்கும் வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

அந்த மாட்டிற்கு அடியில் பயமில்லாமல் சென்று தனது தாத்தாவை அழைத்து மகிழ்ந்தவாறே பசும் பாலை நேரடியாக மடுவில் இருந்தே குடித்து குதூகலிக்கின்றான் இந்த கிங்கினி மிங்கினி சிறுவன்..!

பாலில் கலக்கும் கலப்படங்களை பார்த்தால் இந்த பொடியனைப் போல நேரடியாக குடித்தால் தான் தரமான பால் கிடைக்கும் போல என்று இந்த வீடியோவுக்கு கமெண்டுகள் பறக்கின்றது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments