இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பைத் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை!

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் மேக வெடிப்பைத் தொடர்ந்து பெய்த கனமழையால் பியாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மணாலி, குலு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு மலைப்பாதைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. கனமழையால், இரவோடு, இரவாக பெரும் இன்னல்களுக்கு இடையே, பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்றனர்.
பியாஸ் ஆற்றில் அபாயத்தை தாண்டி செல்லும் தண்ணீரில்,மரப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் மலை கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து தடைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments