புதுக்கோட்டையில் அரசு மருத்துவரின் வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை..!

0 1949

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அரசு மருத்துவரின் வீட்டில் பூட்டை உடைத்து 200 சவரன் நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கணாமலைப்பட்டி அரசு மருத்துமனையில் பணிபுரியும் ஆசிக் அசன் முகமது என்ற மருத்துவர், நேற்றிரவு புதுக்கோட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர் வீட்டிலும், அதற்கு அருகே இருந்த வீட்டிலும் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களும் திருடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments