"ஏக்நாத் ஷிண்டேவை கனத்த இதயத்துடன் முதல்வராக ஏற்றுக் கொண்டோம்"-சந்திரகாட் பாட்டீல் பேச்சால் சர்ச்சை drafty

ஏக்நாத் ஷிண்டேவை கனத்த இதயத்துடன் மகாராஷ்டிர முதலமைச்சராக ஏற்றுக் கொண்டதாக அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாட் பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி ஆட்சி அமைந்திருப்பது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சர் பதவியில் அமராதது வருத்தமளிப்பதாகக் கூறிய அவர், வேறு வழியின்றி ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
Comments