சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவனை பிடித்த போலீசார்.. 2 இருசக்கர வாகனங்கள், 48 செல்போன்கள் பறிமுதல்..!

0 969
சென்னையில் இருசக்கர வாகனங்களை திருடிய 16 வயது சிறுவனை பிடித்த போலீசார்.. 2 இருசக்கர வாகனங்கள், 48 செல்போன்கள் பறிமுதல்..!

சென்னையில் இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவனை பிடித்த போலீசார் அவனிடம் இருந்து 48 திருட்டு செல்போன்களை மீட்டனர்.

வேளச்சேரியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், இரவில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்த இருசக்கர வாகனம் திருடு போனதாக போலீசில் புகார் அளித்தார். இதில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் பிடித்தனர்.

இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் செல்போன் பறிப்பதை வாடிக்கையாக கொண்ட அந்த சிறுவனிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 48 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments