தீப்பற்றிய காரில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்..!

0 1502

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தொழில்நுட்பக் கோளாறால் தீப்பற்றிய காரில் சிக்கித் தவித்த வாகன ஓட்டியை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

பெர்கன் நகரில் சென்ற காரில் எலக்ட்ரிக் பழுதால் திடீரென தீப்பிடித்தது.  கதவுகள் சேதமாகி திறக்க முடியாத நிலையில், கார் கதவின் கண்ணாடியை உடைத்து போலீசார் வாகன ஓட்டியை பத்திரமாக மீட்டனர்.

கடந்த சனிக்கிழமை சம்பவம் நிகழ்ந்த நிலையில், போலீசார் சீருடையில் உள்ள  பாடிகேமில் பதிவான வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments