தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம்? - நீதிபதி

0 924

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு என்ன அவசரம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

13 மாவட்டங்களில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய முடியாததால் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.

மேலும், டெட் முடித்தவர்கள் மற்றும் தகுதியானவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி என்றால் நிரந்தரஆசிரியர்களை நியமிக்கலாமே என கேள்வி எழுப்பிய நீதிபதி, ஜூலை 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments