குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம .!

0 641

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையொட்டி அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூலை 22-ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments