சொந்த பைக்கால செய்வினை வச்சுகிட்ட யூடியூப்பர் TTF வாசன்..! 247 கிமீ ஓவர் ஸ்பீடு… வீலிங்… குவியும் புகார்கள்..!

0 11312
சொந்த பைக்கால செய்வினை வச்சுகிட்ட யூடியூப்பர் TTF வாசன்..! 247 கிமீ ஓவர் ஸ்பீடு… வீலிங்… குவியும் புகார்கள்..!

அதிவேகத்தில் பைக் ஓட்டி, விபரீத வீலிங் சாகசம் செய்து, சிறுவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக, யூடியூப்பில் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த டிடிஎப் வாசன் என்ற யூடியூப்பர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் குவிந்து வருகின்றது.

கோவையை பூர்வீகமாக கொண்ட யூடியூப்பர் டிடிஎப் வாசன்..! அதிவேகத்தில் பைக் ஓட்டுவது... வீலிங் செய்வது... என்று தனது ரேசிங் திறமையால் யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு குறுகிய காலத்தில் 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கடந்துள்ளார்

வாசனின் 11 லட்சம் ரூபாய் பைக், 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கேமராவுடன் கூடிய ஹெல்மெட், 70 ஆயிரம் மதிப்புள்ள பைக்கர் சட்டை, 48 ஆயிரம் மதிப்புள்ள பைக்கர் பேண்ட் ஆகியவை ஒரு குரூப்பை கவர்ந்து இழுத்ததால், பைக்கிள் செல்லுமிடமெல்லாம் தங்கம்.. சாமி... என்று ரசிகர்களை செல்லமாக அழைத்து மகிழும் வாசனின் கனிவான பேச்சும்., அவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

வாசனின் பிரபலத்தை பயன்படுத்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை பிரபலப்படுத்த, அவரை வரவைத்து ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் அண்மையில் கோவையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து பிறந்த நாள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார் டிடிஎப் வாசன்...

ஆயிரக்கணகான ரசிகர்கள் குவிந்ததால், திக்குமுக்காடி போன டிடிஎப் வாசனால் அவரது ஹெல்மெட்டைக்கூட காப்பாற்ற இயலவில்லை.

ஆம் கூட்டத்தில் வந்த ரசிகர் ஒருவர் வாசனின் ஞாபகர்த்தமாக, சுமார் 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட்டை பத்திரமாக எடுத்துச்சென்று விட்டார்.

இந்த ரசிகர்கள் கூட்டம் வாசனுக்கு பெரிய வரவேற்பை கொடுத்த அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

விபரீதமாக பைக் ஓட்டுவதை மட்டுமே யூடியூப்பில் பதிவிட்டு இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வாசனுக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் ஒரு படி மேலே போய், வாசன் 247 கிலோ மீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி பதிவிட்ட வீடியோவையும், வலிமை பட பாணியில் சாலையில் வீலிங் சாகசம் செய்து பதிவிட்ட வீடியோவையும் சென்னை மற்றும் கோவை போலீசாரின் டுவிட்டரில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்னும் ஏராளமானோர் இந்த வீடியோ ஆதாரங்களை வைத்து ஆன்லைன் மூலம் காவல் துறையினருக்கு புகார்களை தட்டி வருகின்றனர். போலீசாரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

இதனால் டிடிஎப் வாசன் விரைவில் அவர் ஓட்டும் அதிவேக பைக்குடன் போலீஸில் விசாரணைக்கு ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் சொந்த பைக்கால அவரே செய்வினை வச்சுக்கிட்டார் என்று ஒரு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், திறமையான டிராவல் பிளாக்கரான டிடிஎப் வாசனின் வளர்ச்சி பிடிக்காமல், சமூக வலைதளங்களில் விமர்சனம் என்று வன்மத்தை கொட்டி வரும் சிலர் இது போன்ற புகார்களை போலீசில் அளித்து வருவதாக வாசனின் ஆதரவாளர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments